பள்ளிக்கரணையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம்

  1. Home
  2. »
  3. காவல்துறைச் செய்திகள்
  4. »
  5. பள்ளிக்கரணையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம்

பள்ளிக்கரணையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம்

பள்ளிக்கரணை காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
சென்னை, பள்ளிக்கரணை T14 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில், கற்பக விருச்சம் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன்

ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு, இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கற்பக விருச்சம் அறக்கட்டளையின் நிறுவனர்கள் திரு. சத்தியநாராயணன் மற்றும் திரு. விஸ்வநாதன், T14 பள்ளிக்கரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. திருப்பதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை சார்பில் மாநில செயலாளர் திரு. ஹரினி இரா. முருகன்,
மாநில தலைமை நிர்வாகி திரு. மடிப்பாக்கம் தினேஷ்,

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு. நசீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த T14 பள்ளிக்கரணை காவல் நிலையம்,

191-வது மாமன்ற உறுப்பினர்
திரு. J.L. லட்சுமி மற்றும்

தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவையின் மாநில நிறுவனர் திரு. முகம்மது அராபாத் ஆகியோருக்கும்,

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் T14 பள்ளிக்கரணை காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

தகவல்
தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை
தலைமையகம்
சென்னை -100