திருப்பூரில் 7 மூட்டை தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கிய போஸ்ட்மேன்.. இறுதியில் ட்விஸ்ட்

  1. Home
  2. »
  3. காவல்துறைச் செய்திகள்
  4. »
  5. பள்ளிக்கரணையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம்

திருப்பூரில் 7 மூட்டை தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கிய போஸ்ட்மேன்.. இறுதியில் ட்விஸ்ட்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய முக்கிய தபால்களை விநியோகிக்காமல், தன் வீட்டிலேயே தபால்காரர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வீட்டில் சோதனையிட்டபோது, தபால்கள் நிரம்பிய ஏழு மூட்டைகள் இருப்பதை கண்டு தபால்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தபால்காரரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கோபம் அடைந்துள்ளனர், சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த போஸ்ட்மேன் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய கடிதங்கள் மற்றும் தபால்களை டெலிவரி செய்யாமல் நீண்ட நாட்களாகத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் வரை போனது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தபால் துறை திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் , போஸ்ட்மேன் செந்தில்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்த 7 மூட்டை தபால்களை அதிரடியாக மீட்டனர். மீட்கப்பட்ட தபால்கள் அனைத்தும் ஆட்டோ மூலம் தபால் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்களை விநியோகிக்காமல் பதுக்கிய போஸ்ட்மேனின் இந்த செயலால் அப்பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.