எங்க ஊரே பரவாயில்ல போல! இது ரொம்ப மோசம்.. இத்தாலியில் புலம்பும் இந்தியர்கள்!

  1. Home
  2. »
  3. காவல்துறைச் செய்திகள்
  4. »
  5. பள்ளிக்கரணையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம்

எங்க ஊரே பரவாயில்ல போல! இது ரொம்ப மோசம்.. இத்தாலியில் புலம்பும் இந்தியர்கள்!

சுற்றுலாப் பயணிகளின் குமுறல் இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள், “இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்தாலும், அங்கு குறைந்தபட்சம் எங்களிடம் ஏசி வசதியாவது இருக்கிறது. ஆனால் இங்குள்ள பல இடங்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் போதிய குளிர்சாதன வசதி இல்லை. இதனால் வெயில் ரொம்பவே வாட்டி வதைக்கிறது. இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம்” என்று புலம்ப தொடங்கியிருக்கின்றனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை ரோம் உட்பட இத்தாலியின் பல நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பல நகரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் நண்பகல் நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் தற்போது நிலவி வரும் இந்த அதீத வெப்பம், பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வெயிலின் கொடுமையால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான கொலோசியம் போன்ற இடங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.